Skip to main content

விஸ்வாசம் டீமில் தனுஷ்...! பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம் 

Published on 07/03/2019 | Edited on 07/03/2019
danush

 

 

பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. டி.ஜி.தியாகராஜனின் - சத்யஜோதி ஃபிலிம்ஸ் 'விஸ்வாசம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் அடுத்த படத்தை தயாரிக்கிறது. இது இவர்களது 34வது தயாரிப்பாகும். தொடரி படத்திற்கு பிறகு 2வது முறையாக தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணைந்துள்ளனர். எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். இவர் கொடி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைகிறார். நடிகை சினேகா புதுப்பேட்டை படத்தில் 2006 ஆம் ஆண்டு தனுஷுடன் நடித்தார். அதன் பிறகு தற்போது 13 ஆண்டுகள் கழித்து தனுஷுடன் இரண்டாவது முறையாக இப்படத்தில் நடிக்கிறார். அனேகன், மாரி, மாரி 2  படங்களுக்கு பிறகு 4 வது முறையாக தனுஷுடன் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார். வடகறி, டோரா, குலேபகாவலி படங்களுக்கு இசையமைத்த 'ஒரசாத' பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை உரசிச் சென்ற விவேக் - மெர்வின் ஆகியோர்இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு  நேற்று குற்றாலத்தில் பூஜையுடன் துவங்கியது.

 

 

சார்ந்த செய்திகள்