Skip to main content

நயன்தாராவைக் கைது செய்ய வேண்டும்; கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

complaint has been lodged police seeking arrest Nayantara and vignesh shivan

 

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களைத் தயாரித்து வருகின்றனர். 'நெற்றிக்கண்', 'கூழாங்கல்', 'சாணிக்காயிதம்' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள இந்நிறுவனம் தற்போது  இயக்குநர் அஸ்வின்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'கனெக்ட்' படத்தையும், குஜராத்தில் மொழியில் உருவாகும் 'சுப் யாத்ரா' படத்தையும்  தயாரித்து வருகிறது. 

 

இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கண்ணன் என்பவர்  நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரில், " விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் நெருங்கி பழகி வருகின்றனர். இவர்கள் 'ரவுடி பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். . ரவுடிகளை ஒழிக்க, தமிழக போலீஸ் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், சமூக பொறுப்பின்றி, இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும், ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக, ரவுடி பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருப்பது, பொது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ரவுடி பிக்சர்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்ய வேண்டும். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும். இருவர் மீதும், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

 

கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'நானும் ரௌடிதான்' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து, அதனை அடையாளமாக கொண்டு ரௌடி பிச்சர்ஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் ரௌடி என பெயர் உள்ளதால் தேவையில்லாத பிரச்னை வரும் எனக் குறி இதனை மாற்ற பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்