சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 180 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
![charu hassan](http://image.nakkheeran.in/cdn/farfuture/QIAppTc6ds_W0s58lmM2LcxPNIet3uVCYNn3ZXgQ45A/1585741815/sites/default/files/inline-images/charu%20hassan.jpg)
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாக கடந்துவிட்டது. இதில் நூறு பேருக்கும் மேல் குணமடைந்துள்ளனர். இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம்-சுஹாசினியின் மகன் நந்தன் இங்கிலாந்து சென்றுவிட்டு திரும்பிய பின் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இன்றுடன் 11 நாட்கள் ஆகின்றது. இதை சுஹாசினி தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது அப்டேட் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் சுஹாசினியின் தந்தை சாருஹாசன், தனது பேரன் நந்தன் தனிமைப்படுத்திக்கொண்டது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதை சுஹாசினி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “என் பேரன் நந்தன் லண்டனிலிருந்து வந்தால், தாத்தா என்று என்னைப் பார்க்கத்தான் வருவான். இப்போது அவன் வந்து 10 நாளாச்சு. முகத்தைக் கூட பார்க்கவில்லை. கஷ்டம்தான். ஆனால், கரோனாவை விரட்டியடிக்க இது தேவைதான்” என்று தெரிவித்துள்ளார்.