Skip to main content

கலாபவன் மணி மரணத்திற்கு காரணம் என்ன? சிபிஐ அறிக்கை தாக்கல்!

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

ஜெமினி, புதிய கீதை, எந்திரன், பாபநாசம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் கலாபவன் மணி. இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர். மலையா சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் தமிழ் சினிமாவிலும் பிரபலமாகினார்.  
 

kalabavan mani

 

 

இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் தேதி கேரளாவிலுள்ள சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் மர்மமான முறையில் இறந்திருந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. பிரேத பரிசோதனையில் அவர் உடலில் மெத்தில் மற்றும் எத்தில் ஆல்கஹால் இருந்ததும், க்ளோரோபைரபோஸ் என்ற கிருமிநாசினி இருந்ததாகவும் கூறப்பட்டது. 

இதன்பின் மத்திய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் முடிவுகள் வேறாக இருந்ததால் குழப்பம் நீடித்தது. அவர் மதுவில் விஷம் கலந்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகங்களை எழுப்பினர். இதனால் கலாபவன் மணியின் குடும்பத்தார், இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, கடந்த 2017-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர். அதன்பின் கேரள உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
 

 

இந்த விசாரணை இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் 35 பக்கங்களை கொண்ட அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில், கலாபவன் மணியின் மரணம் கொலையல்ல, அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தியன் காரணமாக ஏற்பட்ட கல்லீரல் நோயால் தான் அவர் மரணத்தை தழுவியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்