Skip to main content

"வாழ்த்துகள் தம்பி சார்" கலாய்த்த கமலுக்கு ஒரே வார்த்தையில் பதில்சொன்ன சூர்யா!

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

"Brother sir" - Kamal Haasan greets Surya

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (03.06.2022) வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் சூர்யா, கமல்ஹாசன் மற்றும் 'விக்ரம்' படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்தான ட்விட்டர் பதிவில், " அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது. உங்களுடன் திரையில் இணைந்து நடிக்கும் கனவு நனவானது. இதை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி லோகேஷ் கனகராஜ். அனைவரின் அன்பை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது " என கமல்ஹாசனை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.

 

சூர்யாவின் பதிவை ரீட்விட் செய்த கமல்ஹாசன், " அன்புள்ள சூர்யா தம்பி, நீண்ட காலமாக இது நடக்க இருந்தது உங்களுக்கு தெரியும். அன்பு, உங்களிடம் ஏற்கனவே இருக்கிறது. தற்போது மக்களிடம் அதனை அதிகப்படுத்துங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள் தம்பி , மன்னிக்கவும் தம்பி சார்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

இந்த ட்விட்டை ரீட்விட் செய்த நடிகர் சூர்யா, அண்ணா! என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்திருந்தார். இவர்களின் வானத்தை போல படத்தில் வருவது போன்று இவர்களின் அண்ணன், தம்பி பாசம் இரண்டு தரப்பு ரசிகர்களிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்