
சாமி படத்தின் மெகாஹிட்டை தொடர்ந்து சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் தற்போது சாமி படத்தின் பாகமான 'சாமி ஸ்கொயர்' படம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தை போலவே ஹரி இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் விக்ரம் அப்பா, மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். மேலும் சாமி படத்தில் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவ்வின் மகனாக, பாபி சிம்ஹா இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதில் பாபி சிம்ஹாவை முற்றிலும் மாறுபட்ட புதிய பரிணாமத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது நடந்துகொண்டிருக்கும் பட அதிபர்கள் போராட்டத்தால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய தோற்றத்தில் நடித்திருக்கும் பாபி சிம்ஹாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புதிய தோற்றத்தால் பாபி சிம்ஹா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
