தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் படம் பிகில். இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நயன்தாரா, யோகிபாபு, ஆனந்த் ராஜ், இந்துஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து விஜய்யின் இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
வருகிற தீபாவளிக்கு படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் படத்தின் ட்ரைலர் வெளியாகி பல சாதனைகளை புரிந்து வருகிறது. ஒரு மில்லியன் லைக்ஸுக்கு மேல் வாங்கியுள்ளது.
இந்த வீடியோ. மேலும் 25 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்கள் கண்டு கழித்துள்ளனர்.இந்நிலையில் மீண்டும் இந்த படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் உதவி இயக்குனர் கே.பி.செல்வா. இவர் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கின்போதே தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, படத்திற்கு தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்லி மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் உரிமையியல் நீதிமன்றத்தில் சமர்பித்த ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது.