Skip to main content

"தமிழகத்தில் பல காலமாக ஒலித்த பாடல் அது" - பாக்யராஜ் வாழ்த்து

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

Bhagyaraj speech at ARIYAVAN Movie Press

 

'திருச்சிற்றம்பலம்' பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் அரியவன். இதில் அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ராணலி ஆகியோர் நடிக்கின்றனர். எம்.ஜி.பி மாஸ் மீடியா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வழங்க டேனியல் பாலாஜி, சத்யன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அடுத்த மாதம் 3 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் பலரும் கலந்துகொண்டு பேசினர்.

 

கதாநாயகன் ஈஷான் பேசியதாவது, "இங்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இப்படிப்பட்ட பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததே ஆசீர்வாதம் தான். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்திற்கும், இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் அவர்களுக்கும் நன்றி. பொதுவாக இயக்குநர் மித்ரன் R ஜவஹர் படங்கள் கருத்து சொன்னாலும், குடும்பத்தோடு அனைவரும் பார்க்கும் படமாக இருக்கும். இந்தப் படம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை, அவர்கள் எப்படித் தவிர்க்கலாம் என்பதைச் சொல்கிறது. அதை அனைவரும் ரசிக்கும் வகையில் படம் சொல்லியுள்ளது. இந்தப் படம் பார்த்துவிட்டு வரும்போது ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும்" என்றார். 

 

இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது, "எப்போதும் நம் மனதில் சில பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் பல காலமாக ஒலித்த பாடல் கண்கள் இரண்டால் பாடல். ஜேம்ஸ் வசந்தனின் அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்தப் படத்திலும் அருமையான பாடல் தந்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள். இயக்குநர் மித்ரனுடன் உத்தம புத்திரன் படத்தில் வேலை பார்த்துள்ளேன். மிக நல்ல மனிதர் சாந்தமானவர். அவர் புது முகத்தை வைத்து எடுக்கிறார் என்றால் கண்டிப்பாகக் கதை மிக நல்ல கதையாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. புது ஹீரோவை வைத்து தைரியமாகப் படமெடுத்த தயாரிப்பாளர் நவீனுக்கு நன்றி. நாயகனுடைய கண் உயிரோட்டமாக இருக்கிறது. அவர் நல்ல படங்கள் செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள். படத்தில் உழைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்