![Balakrishna video goes viral ; Strengthening condemnations](http://image.nakkheeran.in/cdn/farfuture/zv_387Ld-4r1VeFyo1FmbqomD_P45j1awtijWjyazwE/1654351577/sites/default/files/inline-images/Untitled-15_2.jpg)
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான என்.டி. ராமாராவின் மகன் பாலகிருஷ்ணா. தெலுங்கு திரையுலகில் மூத்த நடிகராக அறியப்படுகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'அகண்டா' படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' தயாரிப்பில் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் துனியா விஜய், ஸ்ருதி ஹாசன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலகிருஷ்ணா தூங்கி கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க சொல்லியுள்ளார். அந்த நிகழ்ச்சியின் போது பாலகிருஷ்ணாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது ரசிகர்களிடம் புகைப்படம் எடுத்துக்கொண்ட பாலகிருஷ்ணா ரசிகரின் தோளில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பி போஸ் கொடுக்க சொல்லியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதை கண்ட ரசிகர்கள் பலரும் பாலகிருஷ்ணாவை விமர்சித்தும் கண்டனங்களையும் எழுப்பி வருகின்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.