சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 7,171 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. மேலும், கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையில் தலா ஒருவர் என மூன்று பேர் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் ராணா டகுபாட்டி ஆகியோர் நடித்த படம் பாகுபலி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் பாகுபலி 2. இந்தியாவில் எடுக்கப்பட்டு அதிகம் வசூல் செய்த படங்களில் முதல் இடத்தை பிடித்திப்பது பாகுபலி 2.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களை இயக்கிய சர்ச்சை இயக்குனரான ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் பரவலால் அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் முன்பு மிகப்பெரிய க்யூவ் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வரிசையில் நிற்கிறது. இந்த க்யூவ் பாகுபலிக்கு நின்ற க்யூவையே தோற்கடித்துவிட்டது என்று கேலியாக ட்வீட் செய்துள்ளார் ராம் கோபால் வர்மா.