ப்ளாக் ஷீப் குழுவினரின் படைப்பு ‘பாபா ப்ளாக் ஷீப்’ இப்படத்தின் டீமுடன் ஒரு கலகலப்பான சந்திப்பு...
விக்னேஷ் காந்த்: ஒவ்வொரு படமுமே எங்களுக்கான நல்ல வாய்ப்பு தான். இந்தப் படத்தில் நிச்சயம் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நடித்தேன். ஒருவருடைய கேரக்டரை மற்றவர் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட கதைகள் எங்களுடைய டீமில் நிறைய உண்டு. எங்களை ஸ்கூல் பசங்களாக ஏற்றுக்கொள்வார்களா என்கிற தயக்கம் முதலில் இருந்தது. ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தது.
ஒரு நாளைக்கு ஐந்து நிமிடம் தான் நாங்கள் ஷூட் செய்வோம். ஆனால் அந்தக் காட்சி குறித்து 50 நிமிடங்கள் பேசுவோம். ரொமான்ஸ் தெரியாதவனுக்கு ரொமான்ஸ் காட்சிகள் கிடைத்த கொடுமைகள் எல்லாம் இதில் நடந்தன. கேரவன் கல்ச்சர் இப்போது அதிகரித்துள்ளது. ஆனால் கல்ச்சரே இல்லாத கேரவன் எங்களுடையது. ஒரு கேரவனுக்குள் 10 பேர் இருப்போம். எங்களுடைய கேரவனுக்குள் வருவதற்கு அனைவருமே பயப்படுவார்கள். எங்களுடைய செட் எப்போதும் ஜாலியாக இருக்கும்.
சீரியசான காட்சிகளிலும் எங்களுடைய நடிகர்கள் ஜாலியாகத் தான் நடிப்பார்கள். இந்தப் படத்தில் 10 நடிகர்களையும் மேய்த்ததே மிகப்பெரிய சாதனை தான். டிஜிட்டல் ஆடியன்ஸும் தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸும் நிச்சயம் வேறு வேறு தான். அவர்களுக்கு ஏற்ற வகையில் நம்முடைய கன்டென்ட் இருக்க வேண்டும். இந்தப் படத்துக்காக நிறைய ரிகர்சல்கள் நடைபெற்றன. நன்கு பயிற்சி எடுத்து நடித்தோம். செட்டில் நாங்கள் பேசிய கெட்ட வார்த்தைகள் எடிட்டிங்கில் போய்விட்டன.