சண்டக்கோழி-2 படத்தை தொடர்ந்து விஷால் நடித்து வருகிற மே10ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘அயோக்யா’, இப்படத்தின் ட்ரைலர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
மேலும் இந்த படம் கடந்த மாதம்ஏப்ரல் 19ஆம் தேதி வெளிவர இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், விஷால் நிச்சயத்தார்த்தம் நிகழ்ச்சியால் படம் தள்ளிபோனது. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் மே 10ஆம் தேதி வெளி வர இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இதன் பின்னும் இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லபப்ட்டது.
இந்நிலையில் மே 7ஆம் தேதி நேற்று இப்படம் சென்ஸாருக்கு அனுப்பப்பட்டது. U/A சான்றிதழ் இப்படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸின் துணை இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தை லைட் ஹவுஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது.