Skip to main content

சிவகார்த்திகேயன் பர்த்டே ஸ்பெஷல்... 'அயலான்' குறித்து வெளியான புதிய தகவல்

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

ayalaan movie teaser release sivakarthikeyan birthday

 

'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ரவிக்குமார். இவர், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'அயலான்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும் படக்குழு கடந்த ஆண்டே நிறைவு செய்துள்ளது. இருப்பினும் படத்தில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சார்ந்த காட்சிகள் நிறைய உள்ளதால், படப்பிடிப்பு நாட்களுக்கு இணையான நாட்கள் படத்தின் சி.ஜி. பணிகளுக்குத் தேவைப்படுகிறது. இதனால்தான் படம் வெளியாவதில் தாமதமாகிறது எனப் படக்குழு தெரிவித்திருந்தது. 

 

இந்நிலையில் படத்தின் டீசர் குறித்த ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, 'அயலான்' படத்தின் டீசர் நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக அயலான் படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் உற்சாகத்தை அளித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் மார்ச் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்