Skip to main content

சர்வதேச திரைப்பட விழாவில் 'டாணாக்காரன்' படத்திற்கு விருது

Published on 07/06/2022 | Edited on 07/06/2022

 

Award for 'Taanakkaran' at the International Film Festival

 

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான படம் 'டாணாக்காரன்'. இப்படத்தில் அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எஸ்.ஆர் பிரபு தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். காவல்துறையின் பயிற்சி பள்ளியில் நடக்கும் அவலங்கள், மிரட்டல்கள், அரசியல் போன்றவற்றை நேரடியாகத் தோலுரித்துக் காட்டியுள்ள இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தை சினிமா விமர்சகர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் பாராட்டினார்.  

 

இந்நிலையில் தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் 'டாணாக்காரன்' படம் விருது வென்றுள்ளது. தாகூர் சர்வதேச திரைப்பட விழா, இந்தியாவில் மேற்கு வங்கத்தில் உள்ள போல்பூரில் மாதந்தோறும் நடைபெறும். இந்த விழாவில் நேரடியாக படம் திரையிடப்படுவது, இசை நிகழ்ச்சி, விருது வழங்கும் விழா உள்ளிட்டவை நடைபெறும். அந்த வகையில் சிறந்த கதை சொல்லல் பிரிவில் 'டாணாக்காரன்'படத்திற்கு விருது கிடைத்துள்ளது. இதனை 'டாணாக்காரன்' படத்தின் இயக்குநர் தமிழ் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து தாகூர் சர்வதேச திரைப்பட விழாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.        

 

 

சார்ந்த செய்திகள்