Published on 21/01/2021 | Edited on 21/01/2021
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாலா இயக்கத்தில் கடைசியாகத் திரையரங்கில் வெளியான படம் 'நாச்சியார்'. இப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய 'வர்மா' திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து ஓடிடி தளத்தில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், இயக்குனர் பாலா, நடிகர் ஜிவி பிரகாஷை கதாநாயகனாக வைத்து படம் இயக்கப்போகிறார் என்றும் அப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்றும் உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல், கடந்த மாதமே வெளியானது.
இந்த நிலையில், இப்படம் குறித்த மேலும் ஒரு புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகர் அதர்வா வில்லனாக நடிக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது. பாலா இயக்கிய 'பரதேசி' படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.