வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'அசுரன்'. தமிழில் இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. தெலுங்கு ரீமேக்கை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரித்தனர். தமிழில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்க, மஞ்சுவாரியார் கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடித்தார். இப்படத்திற்கு தெலுங்கில் 'நாராப்பா' எனப் பெயரிடப்பட்டது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ரிலீஸிற்கு தயாரான வேளையில், கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில், 'நாராப்பா' படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவெடுத்த தயாரிப்பு தரப்பு, சில முன்னணி ஓடிடி நிறுவனங்களிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், அமேசான் நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டது. இதனையடுத்து, நாராப்பா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, நாராப்பா திரைப்படம் அமேசான் தளத்தில் வரும் ஜூலை 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாராப்பா ரிலீஸ் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Narappa =
— amazon prime video IN (@PrimeVideoIN) July 12, 2021
entry like a king 🥁
fight like a warrior 💪
win like a champion 🏆
and, leave like a legend 👑
Meet #NarappaOnPrime, July 20.@VenkyMama #Priyamani @KarthikRathnam3 #SrikanthAddala #ManiSharma @SureshProdns @theVcreations pic.twitter.com/JTGj1qOXmX