வெற்றிமாறன் - தனுஷ் ஆகிய இருவரும் அசுரன் படத்தின் மூலம் நான்காவது முறையாக கூட்டணி சேருகின்றனர். இப்படத்தின் படபிடிப்பு வடசென்னை படம் வெளியான ஒரு வாரத்திலேயே தொடங்கப்பட்டுவிட்டது. அதனை அடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவடைந்து ரிலீஸுக்கு தயராக இருக்கிறது.
![asuran](http://image.nakkheeran.in/cdn/farfuture/7v1yubPClZZ7xDDyjq11nrnAsMEtt-g839qIS9w32tA/1569830685/sites/default/files/inline-images/asuran_2.jpg)
கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷ் அப்பாவாக நடிக்கிறார். பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுகிறது. மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மஞ்சு வாரியர்தான் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம்தான் மஞ்சு வாரியருக்கு முதல் படம்.
![100](http://image.nakkheeran.in/cdn/farfuture/OPWRii48hBB2FAykxiLRBGWAYMkAj39j_ua-3tOSaJ0/1569830848/sites/default/files/inline-images/336x90_1.jpg)
அக்டோபர் 4ஆம் தேதி இப்படம் ரிலீஸாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது, படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட்டது. பலரும் எதிர்பார்த்த இந்த படத்திற்கு தற்போது சென்சார் போர்டு U/A சான்றிதழை வழங்கியுள்ளது. இதனையடுத்து அதை ஹேஸ்டேகாக இந்தியளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் மூன்று நாட்களில் படம் ரிலீஸாக உள்ள நிலையில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.