!['Asuran' celebrity joins Dhanush in Telugu film](http://image.nakkheeran.in/cdn/farfuture/GPx3eBp7HG_HK6vuDFKQDwube0-V_Zi9ITJ8sxXSY38/1648802989/sites/default/files/inline-images/ken_0.jpg)
நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அதுரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகின்றது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். சாய்குமார், பரணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்நிலையில் 'அசுரன்' படத்தில் தனுஷுக்கு மகனாக சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றவர் 'கென் கருணாஸ்'. நகைச்சுவை நடிகர் கருணாஸின் மகனான இவர் தற்போது 'வாத்தி' படத்தில் மீண்டும் தனுஷுடன் சேர்ந்து நடிக்கயிருப்பதாக தகவல் வந்துள்ளது.
தற்போது தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்', மித்ரன் ஜவகர் இயக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்' ஆகிய படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் தனுஷ் அறிமுகமாகும் முதல் படம் 'சார்' என்பது குறிப்பிடத்தக்கது.