Published on 18/04/2023 | Edited on 18/04/2023

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் பெயரிடாத படம் ஒன்று தயாராகி வந்தது. இப்படத்தை தயாரிப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறது அப்ளாஸ் எண்டர்டெய்ன்மெண்ட். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், 'போர் தொழில்' என இப்படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தை தயாரித்துள்ள அப்ளாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், இதற்கு முன் 'ஹம்பிள் பொலிட்டீசியன் நோக்ராஜ் (கன்னடம்), வதம் (தமிழ்), குருதிக்காலம் (தமிழ்), இரு துருவம் (தமிழ்) உள்ளிட்ட பல பிரபலமான இணையத் தொடர்களை தயாரித்து வழங்கி உள்ளது.