![paatal lok](http://image.nakkheeran.in/cdn/farfuture/6JpgK9Yt7WxvUE8vh7rVDrAKf2g2kjcuyCjXrIhKjPA/1590466109/sites/default/files/inline-images/paatal%20lok.jpg)
இணையத்தில் தற்போது வைரலாகி வரும் வெப் தொடர் 'பாதாள் லோக்'. இந்த வெப் தொடரை பிரபல நடிகையும், விராத் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா தயாரித்துள்ளார்.
வட இந்தியாவில் நடைபெறும் பல நிழல் உலக அரசியல் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடரானது விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் உள்ளது.
அதேபோல பல சர்ச்சைகளுக்கும் உள்ளாகியுள்ளது. இந்தத் தொடரில் அருணாசல பிரதேச மாநிலத்தில் வாழும் குறிபிட்ட இன மக்களை அவதூறு செய்வதுபோன்ற காட்சிகள் இருப்பதாக அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் தேசிய மனித உரிமை கமிஷனில் புகார் அளித்துள்ளனர்.
அந்த மனுவில், “வெப் தொடரில் எங்கள் இனத்தவரை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளன. இதனால் எங்கள் இனத்தவர்கள் வேதனையில் உள்ளனர். என்வே அந்தத் தொடரை தயாரித்துள்ள அனுஷ்கா சர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. நந்தகிஷோர் குர்ஜார் தனது புகைப்படத்தை அனுமதி இன்றி வெப் தொடரில் பயன்படுத்தி உள்ளதாக அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.