உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
![virat kohli](http://image.nakkheeran.in/cdn/farfuture/068rm6reuwPpkepw9iWuD4WGRKTnwiqMr4TFWMdO5g4/1585388881/sites/default/files/inline-images/virat%20kohli.jpg)
இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 66 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 743 லிருந்து 748 ஆக அதிகரித்துள்ளது. இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பிரபலங்கள் வீட்டில் என்னென்ன செய்கிறார்கள் என்பதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் விராத் கோலிக்கு அவருடைய மனைவி அனுஷ்கா ஷர்மா முடி வெட்டி விடும் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “ கிச்சன் கத்தரியால் எனக்கு முடி வெட்டுகிறார். அற்புதமான ஹேர் கட் செய்துள்ளார் என் மனைவி," என்று தெரிவித்துள்ளார்.