
தனுஷ், அனிருத் கூட்டணியில் உருவான 3, வேலையில்லா பட்டதாரி, மாரி படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டய கிளப்பின. அதன் பின் இருவரும் கூட்டணியில் இருந்து பிரிந்து தனியானார்கள். இதனால் தனுஷ் படத்தின் பாடல்கள் டல்லடிக்க ஆரம்பித்தன. அவரது ரசிகர்களும் இதனால் கவலை அடைந்து மீண்டும் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒய்.ஜி.மகேந்திரன் மகன் திருமண நிகழ்ச்சியில் தனுசும் அனிருத்தும் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதைபார்த்த தனுஷ் ரசிகர்கள், இருவரும் படத்திலும் இப்படி சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். பின்னர் இதுகுறித்து பதில் அளித்த அனிருத்.. "மீண்டும் தனுசுடன் சேர்ந்து பணியாற்றுவேன். இது அடுத்த ஆண்டு நடக்கும்" என்று உறுதி அளித்துள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மீண்டும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.