![amitab bachan](http://image.nakkheeran.in/cdn/farfuture/2aRWJ-1CWOvC3-DN7E-iPjy356F_l_Rtm7tSA7_0s-c/1595570556/sites/default/files/inline-images/amitab-bachan-1_0.jpg)
கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. அதுவும் மும்பை மாநகரில் தினந்தோறும் பலரு இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி உள்ளிட்டோர் இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் இருந்துகொண்டே அமிதாப் பச்சன் ட்விட்டரின் வாயிலாக பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், அமிதாப் பச்சன் தனது ரசிகர்களுக்காக ட்விட்டரில் கவிதை வடிவில் ஒரு பதிவை நேற்று வெளியிட்டார். அதில், “விதி மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிறைப்படுத்தப் பட்டிருப்பதும் விதியால் நிகழ்ந்ததுதான். எந்த வகையான சிறைப்படுத்தலுக்கும் நிச்சயம் ஒரு முடிவு உண்டு. அந்த வகையில், எனது இந்தச் சிறைவாசத்துக்கும் ஒரு முடிவு இருக்கும்.
அனைவருக்குமே தனிப்பட்ட முறையில் ஒரு எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இருக்கும். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட விதியை வெற்றிக்கொள்பவர் யாரும் கிடையாது. மக்களில் பெரும்பாலானோர் தங்கள் விதியை ‘நான்’ என்ற அகந்தையால் வெற்றி கொள்ள நினைக்கின்றனர். ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறுவதில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமிதாப் பச்சனுக்கு எடுக்கப்பட்ட கரோனா டெஸ்ட்டில் நெகடிவ் என்று வந்துவிட்டதாக வதந்திகள் பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அமிதாப்.