Skip to main content

நேரம் குறித்த அஜித் - காத்திருக்கும் ரசிகர்கள்

Published on 30/12/2022 | Edited on 30/12/2022

 

ajith thunivu trailer update

 

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் 'துணிவு'. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் 'சில்லா சில்லா', 'காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், ஒரு புதிய அப்டேட் நாளை டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

'துணிவு' படத்தின் கதாபாத்திர பெயர் மற்றும் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. படத்தில் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் 'மை பா', பிரேம் - 'பிரேம்', பகவதி பெருமாள் - ராஜேஷ், ஜான் கொக்கேன் - க்ரிஷ், வீரா - ராதா, ஜிஎம் சுந்தர் - முத்தழகன், அஜய் - ராமச்சந்திரன், சமுத்திரக்கனி - தயாளன் உள்ளிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் மஞ்சு வாரியர் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

 

இந்த நிலையில் 'துணிவு' படத்தின் ட்ரைலர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நாளை (31.12.2022) மாலை 7 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. ரிலீஸுக்கு இன்னும் குறைந்த நாட்களே உலா நிலையில் ரிலீஸ் தேதி இந்த ட்ரைலரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்