Skip to main content

கையில் காயம்.. வைரலாகும் அஜித் நியூ லுக்!

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

ajithkumar

 

அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் இரண்டாவது படமாக உருவாகிறது ‘வலிமை’. அதிரடி சண்டை படமாகத் தயாராகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 60% சதவிதம் வரை முடிந்துள்ளது.

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்திலிருந்தே நிறுத்தி வைக்கப்பட்டது. படத்தின் முக்கியமான காட்சிகளைப் படமாக்க நீண்ட ஷெடியூல் ஒன்றைத் திட்டமிட்டு, ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு வந்தன. ஆனால், அனைத்துமே கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டுள்ளதால், இப்படப்பிடிப்பை ஒரே கட்டமாக கரோனா பாதிப்புகள் முழுவதுமாக முடிந்த பிறகு நடத்திக்கொள்ளலாம் என அஜித் தெரிவித்துவிட்டதாகக் கூறப்பட்டது.


சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து கடந்த மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. இதில் அஜித் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. சிறுசிறு காட்சிகளை மட்டும் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் வில்லனாக நடிக்கும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். 

 

இந்நிலையில், நடிகர் அஜித் கையில் காயத்துடன் தனக்கு ஸ்டண்ட் டூப்பாக நடித்தவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. 


 

 

சார்ந்த செய்திகள்