கடந்த ஆண்டு 'தக்ஷா' என்னும் மாணவர்களின் ஆராய்ச்சி குழுவிற்கு நடிகர் அஜித் ஆலோசகாராக நியமிக்கப்பட்டார். மேலும் இந்தக் குழு பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்து, சாதனைகளைப் படைத்தது. பெங்களூருவில் நடந்த ட்ரோன் ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொண்டு பரிசுகள் வென்றது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வெளியேரவே அச்சப்படும் நிலையில் இந்தத் 'தக்ஷா' குழுவின் உதவியுடன் தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் சம்மந்தப்பட்ட மருத்துவர் ஒருவர் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் ஐடியாவை கொடுத்தவர் நடிகர் அஜித் அவர்கள்தான் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் பகிர்ந்து, #AjithLedDroneToFightCorona என்ற ஹேஷ்டேகை ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.