Skip to main content

ஐஸ்வர்யா ராயின் கார் பஸ் மோதி விபத்து 

Published on 27/03/2025 | Edited on 27/03/2025
aishwarya rai car accident

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் கடைசியாக மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து எந்த படத்திலும் இன்னும் அவர் அதிகாரப்பூர்வமாக கமிட்டாகவில்லை. இடையில் பொது நிகழ்ச்சிகளில் தனது மகளுடன் அதிகம் கலந்து கொண்டு வருகிறார். 

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயிக்கு சொந்தமான சொகுசு கார் ஒன்று அமிதாப் பச்சன் வீடு இருக்கும் பகுதியில் சென்றது. அப்போது காரின் பின்புறம் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் லேசான பாதிப்பு அடைந்தது. ஆனால் காரில் ஐஸ்வர்யா ராய் பயணிக்கவில்லை. ஓட்டுநர் மட்டுமே ஓட்டி சென்றுள்ளார். 

விபத்துக்குப் பிறகு, அந்த பகுதியில் ஒரு பங்களாவிலிருந்து வெளியே வந்த பவுன்சர் பஸ் ஓட்டுநரை அறைந்தார். பின்பு பஸ் ஓட்டுநர் காவல் துறைக்கு தகவல் கொக்க சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் என்ன நடந்தது என விசாரித்துள்ளனர். பின்பு பவுன்சர் பஸ் ஓட்டுநரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக எந்த புகாரும் அல்லது வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதனிடையே விபத்து தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்