Skip to main content

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை ரம்யா பாண்டியன்!

Published on 22/05/2021 | Edited on 22/05/2021

 

ramya pandian

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இருப்பினும், தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை, அரசியல் பிரமுகர்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்துமாறு வலியுறுத்திவருகின்றனர்.

 

அந்த வகையில், நடிகை ரம்யா பாண்டியன் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரம்யா பாண்டியன், “முதல் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்த ரம்யா பாண்டியன் 

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

ramya pandiyan act with mammootty in nanbagal nerathu mayakkam movie

 

'ஜோக்கர்' படம் மூலம் அறிமுகமாகி 'ஆண் தேவதை' படத்தில் நடித்த நடிகை ரம்யா பாண்டியன் தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட் மூலம் மிகவும் பிரபலமானார்.  இதனைத் தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். இவர் கடைசியாக சூர்யாவின் 2டி என்டர்டைமென்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான ராமே ஆண்டாளும் ராவணே ஆண்டாளும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

 

ad

 

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி நடிக்கும் 'நண்பகல் நேரத்து மயக்கம்'  என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜல்லிக்கட்டு, அங்கமாலி டைரிஸ், ஆமென் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இப்படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு  தமிழகத்தில் பழனி சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை நடிகை ரம்யா பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

 

 

 

Next Story

உலக பூமி தினம்! - நடிகர் விவேக் நினைவாக நடப்பட்ட 59 மரக்கன்றுகள்!

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

Actor Vivek's contribution is greater in two different field

 

நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக 16ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், 17ஆம் தேதி அதிகாலை சுமார் 4.35 மணியளவில் அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவரது இழப்பு திரை உலகை தாண்டி பல்வேறு தரப்பினரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

 

நடிகர் விவேக் தொடர்ந்து சமூக செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தவர். மேலும் கலாமுடன் சேர்ந்து பல லட்ச மரங்களை நட்டுள்ளார். அதே போல் விவேக்கின் மறைவையொட்டி பலரும் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் இன்று சென்னை திருவள்ளூர் எஸ்.பி. அலுவலக ஆயுதப்படை வளாக மைதானத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு, நடிகர் விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது.

 

Actor Vivek's contribution is greater in two different field

 

இதில் நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் எஸ்.பி. அரவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று விவேக்கின் வயதைக் குறிக்கும் வகையில் 59 மரக்கன்றுகளை நட்டனர். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரம்யா பாண்டியன் பேசியதாவது, “முதலில் அனைவருக்கும் உலக பூமி தின வாழ்த்துகள். எப்பொழுதும் நம்மால் முடிந்த அளவிற்கு இயற்கைக்கு நமது பங்களிப்பை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் நடிகர் விவேக் அவர்கள் பலருக்கும் உத்வேகமாக இருந்திருக்கிறார்.

 

எனக்கும் அவர் உத்வேகமாக இருந்திருக்கிறார். அதனால் இன்றைக்கு நடிகர் விவேக் அவர்களின் வயதைக் குறிக்கும் வகையில் இந்த 59 மரக்கன்றுகளை நட்டுள்ளோம். கலைக்கும், கலைஞனுக்கும் அழிவு கிடையாது என்பதால் நடிகர் விவேக்கின் பங்களிப்பு இவை இரண்டிலும் அதிகமாக இருப்பதால் அவர் எப்பொழுதும் நம்முடனே இருப்பார் என்பதுதான். பின்னர் இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்த எஸ்.பி. அரவிந்தன் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்தார்.