தனுஷின் அனேகன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் கேரள நடிகை லீனா. தொடர்ந்து விக்ரமின் கடாரம் கொண்டான், திரௌபதி, நயன்தாராவின் ஓ2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு அபிலேஷ் குமார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்பு 2013 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
இதையடுத்து தனது இரண்டாம் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ககன்யான் விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை மணந்துள்ளதாகத் தெரிவித்த அவர், திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி ககன்யான் வீரர்களை அறிமுகம் செய்த நிகழ்ச்சியில் பிரசாந்த் நாயருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இதனை அறிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், “பிரதமர் மோடி, இந்திய விமானப்படை போர் விமானி கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயருக்கு முதல் இந்திய விண்வெளி வீரர் விருது வழங்கினார். நமது நாட்டிற்கும் நமது கேரள மாநிலத்திற்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுத் தருணம். நான் 17 ஜனவரி, 2024 அன்று பிரசாந்தை பாரம்பரிய முறைப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டேன்” என்றார்.