Skip to main content

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை கேத்ரின் தெரசா!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021

 

Catherine Tresa

 

கடந்த சில வாரங்களாக இந்தியாவை உலுக்கிவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இருப்பினும், தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாகப் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். 

 

தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், 'மெட்ராஸ்', 'அருவம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை கேத்ரின் தெரசா கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கேத்ரின் தெரசா, "நான் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். நீங்கள் செலுத்திவிட்டீர்களா" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்