Skip to main content

காயத்திலிருந்து குணமடைந்த விஷால்... இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'லத்தி'

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

vishal

 

து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான 'வீரமே வாகை சூடும்' திரைப்படம் கடந்த மாத தொடக்கத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து, வினோத் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் லத்தி திரைப்படத்தில் விஷால் கவனம் செலுத்திவந்தார். இப்படத்திற்கான சண்டைக்காட்சியில் ஈடுபட்டபோது அவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காக கேரளா சென்ற விஷால், தற்போது முழுமையாக குணமடைந்து, லத்தி படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்துள்ளார். 

 

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷால், "கேரளாவில் எடுத்துவந்த சில வார ஆயுர்வேத சிகிச்சைக்கு பிறகு, தற்போது மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளேன். லத்தி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள தயாராக இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்