
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் விக்ரம். கடாரம் கொண்டான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் மகான், அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகர் விக்ரம் பிரபல பின்னணி பாடகி பி. சுசீலாவை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பாக பாடகி பி. சுசீலா தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள சமூகவலைத்தள பதிவின் விவரம் பின்வருமாறு...,
"பாடகி பி. சுசீலாவின் தீவிர ரசிகன் எனக் கூறி ஒரு நாள் அவரை சந்திக்க நடிகர் விக்ரம் அனுமதி கேட்டிருந்தார். அதனையடுத்து மறுநாள் பி.சுசீலாவைச் சந்தித்த அவர், பயம் கலந்த மரியாதையுடன் சிறிது நேரம் கனவுலகில் இருந்தார். உங்கள் பாடல் போலவே உங்கள் பேச்சும் இனிமையாக இருக்கிறது என்றார். 10 நிமிடம் சந்திக்க அனுமதி கேட்ட விக்ரம் 2 மணிநேரம் பி.சுசீலாவுடன் இருந்து பாடல் பாடி மகிழ்ந்தார். அதன் பிறகு பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றுள்ளார். மேலும் என் வாழ்க்கை கனவு நனவானது என்றும், அதற்கு ஆண்டவனுக்கு நன்றி எனக் கூறி விட்டுச் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இறுதியாக நல்ல ஒரு மாலைப் பொழுதை எங்களுக்கு அளித்த விக்ரம் அவர்களுக்கு நன்றி. இத்தனை உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு முன்னணி நடிகர், இவ்வளவு எளிமையாக இருப்பது அபூர்வம். நன்றி விக்ரம் சார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.