Skip to main content

“விஜய் பின்னால எவ்வளவு பேருனு அவங்களுக்கு புரியும் சூழல் உருவாகிடுச்சு”- கருணாஸ்

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

விஜய் வீட்டில் நடைபெற்ற ரெய்ட் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த கருணாஸ், “விஜய்யின் மாஸ்டர் பட ஷூட்டிங் நெய்வேலியில் நடைபெறுவது யாருக்கும் தெரியாமல் இருந்தது. அந்த படத்தின் ஷூட்டிங் இதற்கு முன்பிலிருந்தே நடைபெற்று வருகிறது.ஆனால், பாஜகவினர் நடத்திய போராட்டத்திற்கு பின்னர்தான் அங்கு பல லட்சம் பேர் கூடும் சூழல் உருவானது. நடிகர் விஜய்யை பின் தொடர்பவர்கள் அந்த பகுதியில் மட்டும் எவ்வளவு பேர் இருப்பார்கள் என்பதை தமிழக அரசும், மத்திய அரசும் புரிந்துக் கொள்ளும் சூழல் உருவாகி இருக்கிறது” என்று கூறினார்.
 

vijay

 

 

அதனையடுத்து, ரஜினிக்கு வருமான வரித்துறை விலக்கு கொடுத்திருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு பதிலளித்த கருணாஸ், “ரஜினி சாருக்கு வருமான வரித்துறையில் விலக்குக் கொடுத்துள்ளார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. அப்படிக் கொடுத்திருப்பதற்கும் வாய்ப்பில்லை.

இந்தியாவில் ரஜினியும் ஒரு குடிமகன்தான். அவருக்கு மட்டும் வருமான வரித்துறையில் சலுகை கொடுத்துள்ளார்கள் என்பது எல்லாம் அர்த்தமற்ற பேச்சு. சமீபமாக ரஜினியின் கருத்துகள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதால், எதிர்கால அரசியலைக் கருத்தில் கொண்டு சலுகை கொடுத்திருக்கலாமோ என்ற ஐயப்பாடு எனக்கும் ஏற்படுகிறது.
 

day night


வருமான வரித்துறை சோதனை என்பது சட்டத்துக்கு உட்பட்டதுதான். அதில் பெரியவர், சிறியவர் என்று கிடையாது. தனிப்பட்ட நடிகர் விஜய் மீது மட்டும் வருமான வரித்துறை சோதனை தொடுக்கப்படவில்லை. இந்தச் சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கக் கூடாது” என்று கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்