90களில் பிறந்து சிறுவர்களாக வளர்ந்தவர்களுக்கு சக்திமான் தொடர் என்பது தற்போதைய மார்வெல் டிசி சூப்பர் ஹீரோ படங்கள் போன்றது. பலருக்கும் பிடித்தமான சக்திமான் ஏற்படுத்திய தாக்கம் எண்ணிலடங்காதவை. இந்நிலையில் சக்திமான் கதாபாத்திரத்தில் நடித்த முகேஷ் கண்ணா பெண்கள் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
பெண்கள் தங்களுக்கு முன்பு நடந்த பாலியல் ரீதியலான பிரச்சனைகளை வெளியில் சொல்லி குற்றச்சாட்டு வைப்பதுதான் மீடூ இயக்கம். இது ஹாலிவுட்டில் தொடங்கி படிப்படியாக பாலிவுட், கோலிவுட் என்று கடந்த நான்கு ஆண்டுகளில் பெரும் இயக்கமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் நடிகர் முகேஷ் கண்ணா இந்த இயக்கம் குறித்து பேசுகையில், “பெண்களின் வேலை வீட்டைப் பார்த்துக் கொள்வது. வேலை செய்ய ஆரம்பித்தவுடன்தான் இந்த மீடூ பிரச்ச!
னை தொடங்கியது. ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடக்க வேண்டும் என்று இன்று பெண்கள் பேசி வருகின்றனர்” என்று கருத்துக் கூறியிருந்தார்.
இவரின் இந்த கருத்து சமூக வலைதளத்தில் மிகப்பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. "இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் உங்களையா இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டோம், உங்களையா ரசித்து வளர்ந்தோம், இவர் ஒரு முட்டாள்" என்று தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.