Skip to main content

எந்த அறிகுறியும் இல்லாமல் நடிகருக்கு கரோனா...

Published on 26/05/2020 | Edited on 26/05/2020

 

corona


கடந்த மூன்று மாதங்களாக உலகம் முழுவதும் கரோனா பீதியாக உள்ளது. உலகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் மேலானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது ஒரு லட்சட்த்தி நாற்பதியாரத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக மும்பையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைத் தொட்டுவிட்டது.
 


இந்நிலையில் டிவி சீரியல் நடிகர் கிரண் குமார் என்பவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. “கடந்த மே 14ஆம் தேதி சாதாரன மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றேன், அங்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என்பதால் கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனை முடிவில், பாசிடிவ் என்று வந்துள்ளது.

ஆனால், இதுநாள் வரை எனக்கு கரோனாவுக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. நான் நலமாகதான் இருக்கிறேன். வீட்டின் மூன்றாம் தளத்தில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். மே 26 அல்லது மே 27ஆம் தேதி இரண்டாவது முறையாக டெஸ்ட் எடுக்க இருக்கிறேன். இந்த நொடி வரை நான் நலமாகதான் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்