Skip to main content

மாணவர்களின் அரசியலை பேசும் கதிர்! 

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

actor kathir starring student politics film

 

'பரியேறும் பெருமாள்' படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து கதிர் தற்போது அறிமுக இயக்குநர் எஸ்.எல்.எஸ் ஹென்றி எழுதி இயக்கும் படத்தில் மீண்டும் கல்லூரி மாணவனாக நடிக்கவுள்ளார். குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான யுவ லக்ஷ்மி இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் மாஸ்டர்’ மகேந்திரன், கரு. பழனியப்பன், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர் டேனியல் கிறிஸ்டோபர் மற்றும் தென்னிவலன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்க, ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். 

 

கல்லூரி காதலையும் மாணவர்களின் அரசியலையும் வைத்து எடுக்கப்படவுள்ள இப்படத்திற்கு இயல்வது கரவேல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநர் எஸ்.எல்.எஸ் ஹென்றி “இன்று நேற்று நாளை” இயக்குநர்  ரவிக்குமார் மற்றும் “அண்ணனுக்கு ஜே” இயக்குநர்  ராஜ்குமாருடனும்  சினிமா பயின்ற மாணவர் என்பதால் அவர் இப்படத்திற்காக பெரும் ஆய்வு மேற்கொண்டதாகவும் ,கல்லூரி மாணவர்கள் அரசியல் பற்றி பல்வேறு விஷயங்களை இப்படம் பேசும் என்றும்  தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் பூஜை இன்று(2.3.2022) நடைபெற்ற நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு திண்டிவனத்தில் தொடங்க உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்