காதல் மன்னன் ஜெமினி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி தம்பதியரின் பேரன் அபிநய் 'ராமானுஜர்' படம் மூலம் அறிமுகமாகி பின்னர் 'சென்னை 28 - 2' படத்தில் நடித்து தற்போது த்ரிஷா, சிம்ரனுடன் இணைந்து பரமபதம் விளையாட்டு படத்தில் நடித்து வரும் இவர் தன் தாத்தா ஜெமினி கணேசன் குறித்து நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசியபோது....
''நான் சினிமா துறைக்கு லேட்டாக வர காரணம் என்னவென்றால், எனக்கு ஆரம்பகாலங்களில் ஸ்போர்ட்ஸ் மீது அதீத ஆர்வம் இருந்தது. மேலும் நான் ஒரு தொழில்முறை டேபிள் டென்னிஸ் வீரர். எனக்கு விளையாட்டு, பயிற்சி என ஏனைய விஷயங்களுக்கே நேரம் சரியாக இருந்ததால் அதிலேயே மூழ்கிவிட்டேன். பாய்ஸ் படம் வந்த சமயத்தில் பலரும் என்னை நடிக்க வலியுரித்தினர். இருந்தும் அப்போது எனக்கு ஆர்வம் வரவில்லை. மேலும் என்னை போலவே என் தாத்தா ஜெமினிக்கும் முதல் காதல் ஸ்போர்ட்ஸ் தான். நாங்கள் இருவரும் சினிமாவை பற்றி பேசியது கிடையாது, அவருடைய நடிப்பு விஷயங்கள் பற்றியும் பேசியது கிடையாது. அதிகபட்சமாக ஸ்போர்ட்ஸ் விஷயங்கள்தான் பேசுவோம். மற்ற சராசரி நடிகர்கள் போல நானும் முறையாக ஆடிஷன் எல்லாம் ஆட்டன்ட் செய்துதான் சினிமா வாய்ப்புகளை பெறுகிறேன். எனக்கு வீட்டிலும் பிரத்தியேக நடிப்பு பயிற்சி என்ற ஒன்றெல்லாம் என் தாத்தா மூலம் கிடைத்தது கிடையாது. அவரும் அதை விரும்பியது இல்லை. நானும் அவரிடம் அதையெல்லாம் எதிர்பார்த்தது இல்லை'' என்றார்.