ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992-ஆம் ஆண்டு வெளியான படம் 'அண்ணாமலை'. பாலச்சந்தரின் 'கவிதாலயா ப்ரொடக்ஷன்ஸ்' தயாரித்திருந்த இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருந்தார். சரத் பாபு, மனோரம்மா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்திற்கு தேவா இசை பணிகளை மேற்கொண்டார்.
முதலில் 'அண்ணாமலை' படத்தை வசந்த் இயக்குவதாக இருந்தது, பின்பு சில காரணங்களால் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்று 175 நாள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. மேலும் அன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றது.
இந்நிலையில் 'அண்ணாமலை' படம் வெளியாகி இன்றுடன் (27.06.2022) 30-ஆண்டுகள் ஆகிறது. இத்தனை வருடங்கள் கடந்தும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனையொட்டி 'அண்ணாமலை' படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதனிடையே குஷ்பூ ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவில், "அண்ணாமலை, என் கேரியரில் மிக சிறந்த படங்களில் ஒன்று, 30 ஆண்டுகள் கடந்துவிட்டதை என்னால் நம்பமுடியவில்லை. ரஜினிகாந்த் சாரிடம் பணிபுரிந்தது மகிழ்ச்சியாகவும் மரியாதையாகவும் உணர்கிறேன். மேலும், சுரேஷ்கிருஷ்ணா சாருக்கும், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் சாருக்கும் நான் கண்டிப்பாக கடமைப்பட்டிருக்கிறேன். அனைத்து அன்புக்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.
Can't believe its been 30yrs to one of the most iconic movies of my career. #Annamalai
What a joy & honor it was to work with @rajinikanth sir. And I definitely owe it to #SureshKrishna sir & Iyakkunar Sigaram #KBalachander sir. Thank you for all the love ❤️🙏#30yrsofAnnamalai pic.twitter.com/dkafQhrhAB— KhushbuSundar (@khushsundar) June 27, 2022