Skip to main content

3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

‘அபோமினபிள்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியானது. பெண் இயக்குனரான ஜில் கில்டன் இயக்கி இருக்கும் இந்த அனிமேஷன் திரைப்படத்தை ரூ. 531 கோடியில் எடுத்துள்ளனர். 
 

abominable


இந்த படத்தில் வரும் மூன்று நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலின் பெரும்பகுதி தனக்குரியது என சொந்தம் கொண்டாடும் வகையில் சீனா தன்னிச்சையாக வெளியிட்டுள்ள வரைபடம் ‘அபோமினபிள்’ படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கிறது. இந்த வரைபடம்தான் சர்ச்சைக்கு காரணம். ஆனால், தென் சீனக்கடல் தங்களுக்கு சொந்தமானவை என மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் புரூனே ஆகிய 4 தென்கிழக்கு ஆசிய நாடுகளும், இன்னொரு பக்கம் தைவானும் குரல் எழுப்பி வருகின்றன.
 

kaithi


எனவே, சர்ச்சைக்குரிய அந்த வரைப்படத்தை நீக்க வேண்டும் என்று வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் வலியுறுத்தின. ஆனால், இதை படக்குழு ஏற்கவில்லை. இதனால் இந்த இரண்டு நாடுகளும் தடை செய்தது. இதேபோல மலேசிய நாடும் படக்குழுவுக்கு கோரிக்கை வைத்தது. ஏற்கனவே தெரிவித்த பதிலையே மலேசிய நாடுக்கும் தெரிவித்துள்ளது படக்குழு. அதனால் மலேசியாவும் இந்த படத்திற்கு தடை செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்