Skip to main content

ஜப்பானில் 3 விருதுகளைப் பெற்ற சார்பட்டா பரம்பரை

Published on 21/05/2023 | Edited on 21/05/2023

 

3 award-winning Sarbata parambarai in Japan

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித், ஆர்யாவை வைத்து இயக்கிய 'சார்பட்டா பரம்பரை' படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதில் துஷாரா விஜயன், பசுபதி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே 9 ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தை வட சென்னை மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கியிருந்தார் ரஞ்சித்.

 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தைப் பார்த்த கமல்ஹாசன் படக் குழுவினரை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும் விமர்சன ரீதியாகவும் பலரது வரவேற்பைப் பெற்றது. சில வாரங்கள் முன் இப்படத்தின் இரண்டாம் பாகம் 'சார்பட்டா பரம்பரை 2' உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது தொடர்பான போஸ்டரை ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "மேட்ச் பார்க்க ரெடியா... ரோஷமான ஆங்கில குத்துச்சண்ட சுற்று 2" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இந்நிலையில் ஜப்பானில் நடைபெற உள்ள 2021 ஆம் ஆண்டுக்கான ‘ஒசாகா தமிழ் சர்வதேசத் திரைப்பட விழா’வில் சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த கலை இயக்குநருக்கான விருதுகளை சார்பட்டா பரம்பரை வென்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்