திரைத்துறையைத் தாண்டி கார் ரேஸில் ஆர்வமுள்ள அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கார் ரேஸுக்கு திரும்பியுள்ளார். மேலும் அஜித்குமார் ரேஸிங் என்ற புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கியுள்ளார். இந்த அணி துபாயில் நடந்து முடிந்த 24ஹெச் சீரிஸ் போட்டியில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்தது. இதனை அஜித் உற்சாகமாக கொண்டாடினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு அஜித் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். மேலும் ரசிகர்களுக்கு அவர்களது வாழ்க்கையில் கவனம் செலுத்த அறிவுறுத்தி பேட்டி கொடுத்திருந்தார். இந்த நிலையில் அடுத்த போட்டிற்கு அஜித் மற்றும் அவரது அணி தயாராகியுள்ளது. தெற்கு ஐரோப்பிய தொடர் 2025 கார் ரேஸ் போர்ச்சுக்கலில் நாளை(18.01.2025) மற்றும் நாளை மறுநாள்(19.01.2025) ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அஜித் உள்ளிட்ட அவரது அணியினர் போர்ச்சுக்கல் சென்றுள்ளனர்.