Skip to main content

ஸ்ரீதேவிக்கு போட்டியாக வந்த திவ்யபாரதி; சோகத்தில் முடிந்த திரைப்பயணம் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 88

Published on 17/10/2024 | Edited on 17/10/2024
 thilagavathi-ips-rtd-thadayam-87.

பிரபல நடிகை திவ்ய பாரதிக்கு ஏற்பட்ட மரணம் குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார். 

மும்பையில் ஓம் பிரகாஷ் பார்தி, மீதா பார்தி தம்பதிக்கு பிறந்த குழந்தைதான் திவ்ய பாரதி. இவரின் அப்பா தனது முதல் மனைவி இறந்த பிறகு அந்த மனைவிக்கு பிறந்த பூனம் என்ற குழந்தையை வளர்த்து வந்ததோடு மீதா பார்தியை மறுமணம் செய்து கொள்கிறார். திவ்ய பாரதிக்கு குணால் பார்தி என்ற தம்பி இருக்கிறார். சின்ன வயதிலிருந்தே திவ்ய பாரதி அழகாக இருந்ததால் அவளை நடிகை ஸ்ரீ தேவியுடன் ஒப்பிட்டுள்ளனர். அதற்கு ஏற்றது போல் திவ்ய பாரதியும் அதே உடல் தோற்றத்தை உடையவளாக இருந்திருக்கிறாள். இதனால் சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை திவ்ய பாரதிக்கு இருந்தது. இதனால் படிப்பில் ஆர்வம் காட்டாமல் 9ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு முழு மூச்சாக நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். 

திவ்ய பாரதிக்கு 15 வயதில் ‘குணாஹோன் கா தேவ்தா’ என்ற இந்தி படத்தில் வாய்ப்பு வருகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு திவ்ய பாரதி சென்ற பிறகு குழந்தைபோல் இருப்பதாகக் கூறி சங்கீதா பிஜ்லானி என்ற நடிகைக்கு அந்த வாய்ப்பை கொடுத்திருக்கின்றனர். வாய்ப்பு போனாலும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க நிறைய படங்களின் கேசட்டுகளை வாங்கி போட்டுப் பார்த்து நடிக்கப் பழகி இருக்கிறாள் திவ்ய பாரதி. அதன் பிறகு பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் சகோதரர் கீர்த்தி குமார், திவ்ய பாரதியை பார்த்து சினிமாவில் அறிமுகப்படுத்தினால் நல்ல வருமானம் பார்க்கலாம் என்று நினைத்து ‘ராதா கா சங்கம்’ என்ற படத்தில் கோவிந்தாவுடன் நடிக்க வைப்பதற்காக முயற்சிக்கிறார். அதற்காக திவ்ய பாரதிக்கு நடன பயிற்சி கொடுக்கச் சொல்லி மிகவும் நெருக்கமாக கவனித்திருக்கிறார். ஆனால் கடைசியாக இந்த படத்தில் திவ்ய பாரதிக்கு பதிலாக ஜூஹி சாவ்லா என்ற நடிகையை நடிக்கவைத்துள்ளனர். 

இதுபோல தொடர்ந்து படவாய்பை இழந்து வரும் திவ்ய பாரதியை பார்த்த தெலுங்கு தயாரிப்பாளர் ராமா நாயுடு பாம்பேவிலிருந்து அழைத்து வந்து தன்னுடைய மகன் வெங்கடேஷ் நடிக்கும் ‘போபிலி ராஜா’ என்ற படத்தில் நடிக்க வைக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதைத்தொடர்ந்து திவ்ய பாரதி  சீரஞ்சீவியுடன் ‘ரவுடி அல்லுடு’ என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு அப்போது இருந்த தெலுங்கு முன்னணி நடிகர்களுடன் திவ்ய பாரதி கமிட்டானார். தெலுங்கு திரையுலகில் திவ்யா பாரதியின் வளர்ச்சியைப் பார்த்த பாலிவுட் தயாரிப்பாளர் ஸ்ரீ தேவிக்குப் பதிலாக திவ்ய பாரதியை நிறைய படங்களில் கமிட் செய்தனர். திவ்ய பாரதி டோலிவுட்டில் அப்போது லேடி சூப்பர் ஸ்டாராக இருந்த விஜய லட்சுமியுடன் சம்பளத்தில் போட்டி போட்டியுள்ளார். அதே போல் இந்தியில் திவ்ய பாரதிக்கு லேடி அமிதாப் என்ற பட்டமும் இருந்தது. ஸ்ரீ தேவி வாங்கிய சம்பளத் தொகை அளவே திவ்ய பாரதியும் வாங்கியிருக்கிறார். அந்தளவிற்குத் தயாரிப்பாளர் திவ்ய பாரதியை வைத்துத் தயாரிக்க முன் வந்தனர்.

இப்படி நன்றாக வளர்ந்து வந்த சமயத்தில் சஜித் நதியாத்வாலா என்ற பெரிய தயாரிப்பாளருடன் திவ்யபாரதிக்கு காதல் ஏற்படுகிறது. பின்பு இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தபோது சஜித் முஸ்லீம் என்பதால் அவர் மதத்திற்கு மாற திவ்யபாரதி ஒப்புக்கொண்டுள்ளார். இதை அவள் வீட்டில் சொன்னபோது, நன்றாக வளர்ந்து வரும் வேலையில் கல்யாணம், மதம் மாறுவது தேவையா என்று கேட்டுள்ளனர். அதைக் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் மதம் மாறி சனா என்று தனது பெயரையும் மாற்றிக்கொண்டு சஜித் நதியாத்வாலாயாவை நிக்காஹ் செய்து கொள்கிறாள். அதன் பிறகு மும்பையிலுள்ள வெர்சோவா என்ற பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கணவன் மனைவியாகத் தங்கியிருக்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து திவ்யபாரதியை சிறுவயதிலிருந்து வளர்த்த அமிர்தா குமாரி அங்கேயே தங்கியிருக்கிறார். சில நேரங்களில் சஜித் நதியாத்வாலாவுடன் முரண்பட்ட கருத்துகளால் அடிக்கடி திவ்யபாரதி சண்டைபோட்டுள்ளார். 
கல்யாணத்திற்கு பிறகு திவ்ய பாரதியை நிறைய பட வாய்ப்புகள் வந்திருகிறது. 1992 மட்டும்

1993ஆம் ஆண்டுகளில் மட்டும்  14 படங்களுக்கு மேல் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதனால் வேலையின் அழுத்தம் திவ்யபாரதிக்கு இருந்தது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அவளின் கணவர், இனிமேல் படத்தில் நடிக்க வேண்டாம் என்று திவ்ய பாரதியிடம் கூறியிருக்கிறார். ஆனால் திவ்ய பாரதி கணவர் சொன்ன கருத்துக்கு உடன்படாமல் இருந்திருக்கிறாள். ஒருபுறம் அம்மா வீட்டிற்கு செல்ல முடியாமலும் தவித்திருக்கிறாள். இப்படியே திவ்யபாரதிக்கு திருமணமாகி 8 மாதங்கள் கடந்துள்ளது. இதனிடையே மதுவுக்கும் திவ்யபாரதி அடிமையாகியிருக்கிறாள். ஒரு நாள் திவ்யபாரதி வீட்டில் சின்ன பார்டிக்கு ஏற்பாடு செய்து தனது கணவர், தம்பி, ஆடை வடிவமைப்பாளார் மற்றும் இவருடைய கணவர் சதீஸ் ஆகியோரை அழைத்திருக்கிறாள். வெர்சோவாவிலுள்ள வீட்டில் எல்லோரும் ஒன்றாக எல்லோரும் உணவு மற்றும் மது அருந்தி வந்துள்ளனர். பார்டியின்போது ஏற்பட்ட கருத்து முரண் காரணமாக சஜித் நதியாத்வாலா அங்கிருந்து சென்றிக்கிறார். பின்பு தனது அடுத்த படத்திற்கான ஆடை வடிவடைப்பு குறித்து ஆடை வடிவமைப்பாளரிடம் திவ்யபாரதி பேசிகொண்டு இருந்திருக்கிறாள். அப்போது அமிர்த குமாரி சமையல் செய்து திவ்யபாரதிக்கு உணவு கொடுக்க வீட்டின் பால்கனியிலிருந்தபடி பேசிக்கொண்டிருந்த திவ்யபாரதி தடுமாறி 5வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.           

இவ்வழக்கு குறித்த மேலும் விவரங்களை அடுத்த தொடரில் காணலாம்...