கோகுல் மச்சேரியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றி தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
ஏர்போர்ட்டில் பொய்யான தகவலை பரப்பிய ஷாஜு ஜோஸை போலீசார் கைது செய்த பின்பு, பக்கத்துட்டு வீட்டுக்காரரான கோகுல் மச்சேரியை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். அந்த விசாரணையில், மனைவிக்கும் அவளது காதலனுக்கும் ஏற்பட்ட தகாத உறவு பற்றி தெரிந்துக்கொள்ள கோகுல் மச்சேரி பொய்யான ஐடி ஒன்றை உருவாக்கி மனைவியிடம் யாரோ ஒருவர் போல் பேசி உண்மையை தெரிந்துக்கொள்கிறார். இதோடு முந்தைய தொடரில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகப் பின்வருமாறு...
அதன் பிறகு, அந்த செயலில் இருந்து கோகுல் மச்சேரி விலகுகிறார். ஜாதகத்தின் மீது அனுராதாவுக்கு அதீத நம்பிக்கை இருப்பதால், ஆஷா என்ற ஜோசியம் சொல்லக்கூடிய பெண் என முகநூல் பக்கத்தில் மனைவியிடம் கோகுல் மச்சேரி அறிமுகமாகியிருக்கிறார். ஆஷா என்ற பெயரில், அனுராதாவுக்கு கோகுல் மச்சேரி அறிவுரை எல்லாம் சொல்லிக்கொண்டு வந்துள்ளார். தந்திரிக் முறையில் பூஜை செய்தால் காதலனையும், கணவனையும் கைவிட தேவையில்லை என்று கோகுல் மச்சேரி அனுராதாவிடம் சொல்லி, அதற்கு மனைவியையும் அந்த மாணவனையும் நிர்வாணமாக படுத்திருந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சொல்லிருக்கிறார். அந்த புகைப்படத்தை பூஜையில் வைத்துவிட்ட பிறகு மதுவை அதிகமாக குடித்துவிட்டு மந்திரங்களை சொன்னால், காதலனையும், கணவனையும் கைவிட தேவையில்லை என்று சொல்ல அதையும் அனுராதா நம்பிக்கொண்டு காதலனோடு ஒரு ரூம் எடுத்து இருவரும் நிர்வாணமாக படுத்திருந்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். அந்த புகைப்படத்தை பூஜையில் வைத்த பின், மதுபானத்தை அதிகமாக குடித்து மந்திரங்களை எல்லாம் தன்னுடைய கோரிக்கைகளை எல்லாம் சொல்கிறார். நிதானமற்ற சூழ்நிலையில் அனுராதா இருக்கும் இந்த நிலையில், அந்த புகைப்படத்தின் காப்பியை கோகுல் மச்சேரி எடுத்துக்கொள்கிறார்.
இந்த புகைப்படத்தை அனுராதாவிடம் காண்பித்து, இனிமேல் இதுமாதிரி செய்யமாட்டேன் என்று எழுதிக் கொடுக்க வேண்டும் என்று கோகுல் மச்சேரி கேட்க அதன்படி, நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அனுராதாவும் எழுதிக் கொடுத்து மன்னிப்பு கேட்கிறார். மனைவி மீது வெறுப்பு இருந்தாலும் குழந்தையை எண்ணி மனைவியோடு வாழத் தொடங்குகிறார். அதன் பிறகு, மனைவி எழுதிக் கொடுத்த அந்த பேப்பரையும், புகைப்படத்தையும் மாமனாரிடம் காண்பித்து விவரத்தை சொல்கிறார். மகள் தவறு செய்தாலும், அவருடன் வாழ்ந்து வருவதால் கோகுல் மச்சேரி மீது மாமனாருக்கு மரியாதை ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில், கோகுல் மச்சேரியின் பழைய காதலி, பேஸ்புக் மூலம் மீண்டும் இவருக்கு அறிமுகம் ஆகிறார். அந்த பெண்ணுடைய கணவர் தான் ஷாஜு ஜோஸ். திருமணம் ஆன 1 வருடத்திலே தனக்கும், கணவர் ஷாஜு ஜோஸுக்கும் பிரச்சனை ஏற்பட்டு டைவர்ஸ் வாங்கும் மனநிலையில் இருந்தாலும் குழந்தைகளுக்காக வாழ்ந்து கொண்டிருப்பதாக அந்த காதலி, கோகுல் மச்சேரியிடம் சொல்கிறார். தனது திருமண வாழ்க்கையும் சரியில்லாமல் நிலையில் இருக்கும் கோகுல் மச்சேரிக்கு, காதலி சொன்ன வார்த்தைகள் டிஸ்ட்ர்ப் ஆகிறது. அதனால், தனது மனைவியை டைவர்ஸ் வாங்கிவிட்டு அந்த காதலியை மணக்க நினைத்து அதற்கு திட்டம் போடுகிறார்.
மனைவியிடம் ஏதோ ஒன்றை சொல்லி, டெல்லியில் இருந்து டிரான்ஸ்பர் வாங்கிவிட்டு பெங்களூருவில் உள்ள காதலி இருக்கும் அப்பார்ட்மெண்டில் தன் மனைவியோடு குடிப்போகிறார். அதன் பிறகு, காதலியின் கணவர் ஷாஜு ஜோஸிடம் பழகி அந்த குடும்பத்திற்கே நெருங்கிய நண்பராக ஆகிறார். மேலும், காதலியை வெளியே அழைத்துச் செல்கிறார். அதன் பிறகு, காதலியின் வீட்டினுடைய டூப்ளிகேட் சாவியை கேட்க அவரும் கோகுல் மச்சேரியிடம் கொடுக்கிறார். அதன் பின்னர், அந்த சாவியின் மூலம் போலீஸ் கைப்பற்றிய குத்துவால், முகமூடி, பயங்கரவாத நோட்டீஸ் ஆகியவற்றை ஷாஜு ஜோஷினுடைய வீட்டில் வைக்கிறார். மேலும், ஷாஜு ஜோஸினுடைய புகைப்படத்தை வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு ஒரு சிம் கார்டு, ஸ்மார்ட் போன் ஒன்றையும் வாங்குகிறார். அதை பயன்படுத்திக்கொண்டு, ஷாஜு ஜோஸுக்கு பிரச்சனைகளை உருவாக்கி அவரை இதில் இருந்து விலக்கி மனைவியிடம் இருந்து டைவர்ஸ் வாங்கிக்கொண்டு காதலியை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு கோகுல் மச்சேரி இப்படியெல்லாம் செய்திருக்கிறார்.
இதற்கிடையில், அனுராதாவுக்கு மது குடிப்பதில் அதிக ஈடுபாடு வந்துவிடுகிறது. கணவன் பொய் சொல்லி பெங்களூருக்கு வந்திருப்பதை தெரிந்துக்கொண்ட அனுராதா, கோகுல் மச்சேரியிடம் வாக்குவாதம் செய்கிறார். இப்படி பேசுகையில், ஒரு கட்டத்தில் இருவருக்கும் சண்டை வந்து முற்றிப்போகிறது. மீண்டும் தனது காதலனோடு செல்வதாக அனுராதா கூறியவுடன், ஆத்திரமடைந்த கோகுல் மச்சேரி பக்கத்தில் இருக்கக்கூடிய உலோக சிலையை கொண்டு அனுராதாவின் தலையில் தொடர்ந்து அடிக்கிறார். இதில் ரத்தம் பெருகி, அனுராதா சம்பவ இடத்திலேயே உயிரிழக்கிறார். அதன் பின்பு தான், உறவினர்கள், போலீஸ் ஸ்டேசனுக்கு சொல்கிறார். கோகுல் மச்சேரி தான் இந்த கொலையை செய்திருப்பார் என்று யாருக்கும் சந்தேகம் வரவில்லை. அந்த வழக்கு முடிக்கப்பட்டதால், தன்னுடைய புத்திசாலித்தனம் மீது கோகுல் மச்சேரிக்கு நம்பிக்கை வருகிறது. காதலியை திருமணம் செய்துகொள்ள தடையாக மனைவி உயிரிழந்த பிறகு, காதலியின் கணவர் ஷாஜு ஜோஸை பிரச்சனையில் மாட்டிவிட திட்டம் போடுகிறார். ஷாஜு பெயரில் வாங்கிய சிம் கார்டையும், போனையும் வைத்து தான் டெல்லி ஏர்போர்ட்டிலும், பெங்களூர் ஏர்போர்ட்டிலும் பொய்யான தகவலை சொல்லிருக்கிறார். மேலும், ஷாஜு ஜோஸை மாட்டிவிட, ஏர்டல் ஓனரிடம் வாட்ஸ் அப் மூலம் பயங்கரவாதிகள் என கோகுல் மச்சேரி மிரட்டல் விடுக்கிறார். அதன்படி, ஏர்டல் ஓனர் கொடுத்த கம்ப்ளைண்ட்டை வைத்து மிரட்டல் விடுத்த நபரை தேடும் பணியில் வேறு ஒரு போலீசார் தீவிரமாக தேடியதில் ஷாஜு ஜோஸ் தான் இதை செய்தார் என்று போலீசார் நம்பியிருந்தது.
இதையடுத்து, மடிவாலா போலீசார் கோகுல் மச்சேரி மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்கிறார்கள். கொலை தொடர்பான வழக்கு, ஏர்ப்போர்ட்டில் மிரட்டியதால் சிவில் ஏவியேஷன் வழக்கு, ஏர்டெல் ஓனரை மிரட்டிய வழக்கு என 3 வழக்குப்பதிவு போடப்பட்டிருப்பதால் மூன்று வாழ்நாள் தண்டனை வாய்ப்பிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இப்போது பெங்களூர் சிறையில், கோகுல் மச்சேரி தண்டனை பெற்று வருகிறார்.