பல கொலைகள் செய்தும், தன் மனைவியை நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூர கணவனான சப்பாணி என்பவரை பற்றி தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த காவல் நிலையத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் போன் மூலமாக, வாழவந்தான் கோட்டையில் உள்ள கல்குவாரியில் பக்கத்தில் கேட்பாரற்று ஒரு ஸ்கூட்டர் இரண்டு மூன்று நாள்களாக இருப்பதால சந்தேகமாக இருப்பதாக தகவல் வருகிறது. உடனே துவாக்குடி காவல் துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று பார்த்து அந்த ஸ்கூட்டர் வண்டியில் ரெஜிஸர் நம்பரை எடுத்து ஆர்.டி.ஓ ஆபிஸிற்கு சென்று தகவல் சேகரிக்கின்றனர். அதன்படி, பார்த்ததில் அந்த ஸ்கூட்டர் வினோதினி என்ற பெண்ணுடையது என்பதும், அவர் திருவரும்பூர் எல்லையைச் சேர்ந்த வேங்கூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. உடனடியாக, காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது வினோதினி அந்த வீட்டில் இருக்கிறார். அவரிடம் விசாரித்ததில், தன்னுடைய கணவர் தங்கதுரை கார் டிரைவராக வேலை பார்க்கிறார். அவர் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு போனார். ஆனால், இரண்டு மூன்று நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என்று கூறுகிறார்.
இதனையடுத்து, வினோதினி தன்னுடைய கணவரை காணவில்லை என திருவரும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். அந்த காவல் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில், தங்கதுரையின் செல்போன் எண்ணை வாங்கி, அவர் யார் யாரிடம் கடைசியாக பேசினார் என்ற தகவலை சேகரிக்கின்றனர். இப்படி இருக்கும் போது, கிருஷ்ணசமுத்திரம் பக்கத்தில் உள்ள வாய்க்காலில் ஒரு உடல் இருக்கிறது என்று தகவல் கிடைக்கிறது. உடனடியாக, அந்த இடத்திற்கு சென்று அந்த உடலை எடுக்கும் போது காவல்துறையினர் மிகுந்த அதிர்ச்சியடைகின்றனர். ஏனென்றால், அந்த உடலின் தலை மிகவும் மோசமாக சிதைக்கப்பட்டு, உடல் அழுகிய நிலையில், கை கால் கட்டப்பட்டு நிர்வாணமாக இருக்கிறது. உடனடியாக, சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தகவலை கொடுத்து யாரெல்லாம் மிஸ்ஸிங் புகார் அளித்திருக்கின்றனர் என்பதை சேகரித்து அவர்களை எல்லாம் நேரடியாக வரவழைத்து அடையாளம் காணுமாறு உள்ளூர் காவல்துறையினர் கூறுகின்றனர்.
அப்படி மிஸ்ஸிங் புகார் கொடுத்தவர்கள் அனைவரும் அந்த இடத்திற்கு வருகின்றனர். அதே போல், வினோதினியும் அந்த இடத்திற்கு வந்த அழுகிய நிலையில் உள்ள உடல் தன்னுடைய கணவர் தங்கதுரை தான் என்பதை அடையாளம் காண்கின்றார். அந்த உடலை பிரேத பரிசோதனை செய்ததில், வெளியில் இருந்து படுவேகமாக தாக்கப்பட்டு கனமான ஏதோ ஒரு பொருளால் தங்கதுரையின் தலையில் திரும்ப திரும்ப அடித்ததால் மண்டை ஓடு உடைந்து இறந்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. ஐ.எம்.சி.ஐ எண்ணை கொண்டு தங்கதுரையின் செல்போன் எங்கே இருக்கிறது என்று பார்த்ததில், தங்கதுரை இறப்பதற்கு முன்னாள் கடைசியாக எக்ஸ் என்ற நபரிடம் பேசியிருக்கிறார். அப்படி தங்கதுரையின் செல்போன் எங்கே செயல்பாட்டில் இருக்கிறது என்று பார்த்ததில், அதே கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு நபரிடம் தான் அந்த போன் இருக்கிறது.
அவரைப் போய் பார்த்ததில், வலிமையில்லாத ஒரு நபராக ரொம்ப ஒல்லியாக சிறுவனை போல் தோற்றமுள்ள மெலிந்த உடல்வாகு கொண்ட நபராக இருக்கிறார். அவரிடம் விசாரித்ததில், தன்னுடைய பெயர் சப்பாணி என்றும் கூலி வேலை பார்ப்பதாகவும், அந்த பணத்தில் நன்றாக மது குடிப்பதாகவும் கூறுகிறார். குடி, போதை, கஞ்சா ஆகியவை அடிப்படைத் தேவையாக தான் இந்த நபர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சப்பாணியை காவல்நிலையத்திற்கு அழைத்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்துகின்றனர். அதில், தங்கதுரை என்னுடைய பள்ளி தோழர் தான் என்று கூறுகிறார். இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு இருக்கும் போது, கூத்தப்பார் பகுதியில் இருந்து சுப்பிரமணியம் என்ற நபர் இந்த காவல் நிலையத்திற்கு வருகிறார். அந்த சுப்பிரமணி, தன்னுடைய 75 வயதான தந்தை பெரியசாமியை காணவில்லை என்று புகார் அளித்து 6,7 வருடங்களாக தகவல் கேட்பதற்காக அந்த காவல் நிலையத்திற்கு வந்து போகிறார்.
அப்படியாக அன்று சுப்பிரமணியம் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு தற்செயலாக, சப்பானி கூறுகின்ற செய்தியும், சுப்பிரமணி அளித்த புகாரும் ஒன்றாக இருக்கிறது. அது என்னவென்றால், தன்னுடைய வாழ்க்கையில் முதன்முதலாக 2009ஆம் ஆண்டில் தான் முதல் கொலையை செய்தேன் என்று சப்பானி கூறுகிறார். ஒரு நாள் கூலி வேலைக்காக சென்று கொண்டிருந்த போது ஒரு நிலத்தில் 75 வயதான பெரியவர் ஒருவர், மற்றவரையெல்லாம் வேலை வாங்கி கொண்டிருக்கிறார். அந்த பெரியவரிடம் நிறைய பணம் இருப்பதை தெரிந்துகொண்ட சப்பானி, மற்றவர்களெல்லாம் அந்த இடத்தில் இருந்து செல்கிற வரையில் காத்திருந்து அவரை ஒரு இடத்தில் அழைத்து சென்று அந்த பெரியவரை வெட்டிக் கொலை செய்து அந்த பணத்தை எடுத்துக்கொள்கிறார். அந்த பெரியவரின் உடலை துண்டுத்துண்டாக வெட்டி பக்கத்தில் இருக்கின்ற நீர்நிலைகளிலே துண்டு துண்டாக போடுகிறார். இந்த வழக்கு 7 வருடமாக நடந்துவந்த போதும், அவருடைய உடல் கிடைக்கவேயில்லை. இந்த செய்திகளையெல்லாம் சப்பானி கூறும்போது, தற்செயலாக பெரியசாமியின் மகனான சுப்பிரமணியம் கேட்டு அதிர்ச்சியடைகிறார்.
சப்பாணியிடம் மேலும் விசாரணை நடத்தியதில் கொலைகள் நடந்த இடத்தை சப்பாணி காண்பிக்கிறார். அப்படி பார்த்ததில், கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் இருந்தே 5 உடல்கள் கைப்பற்றப்படுகிறது. சப்பாணியைப் பற்றி முழுமையாக விசாரணை நடத்த போலீசார் இறங்குகின்றனர். அதில், சப்பாணியின் வீடு கிருஷ்ணசமுத்திரம் எளிய வீடாக இருக்கிறது. அந்த வீட்டில், சப்பாணியின் தந்தை, தாய் மற்றும் தம்பி மட்டும் தான் இருக்கிறார்கள். சப்பாணிக்கு திருமணம் ஆவதற்கு முன்னாலே அவரது தம்பிக்கு கல்யாணம் ஆகிறது. தம்பியின் மனைவி பெயர் மோகனப்பிரியா. சப்பாணியினுடைய தம்பி ஒரு விபத்தில் இறந்து போனதற்கு பின்னாலும், மோகனப்பிரியா தன்னுடைய மாமியார் வீட்டில் தான் இருக்கிறார். மோகனப்பிரியாவுக்கும், சப்பாணிக்கும் தொடர்பு ஏற்பட்டதில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.
சப்பாணி அனைவரிடம் நன்றாக பேசும் போது ஆற்றல் மிகுந்த நபர். அதனால், அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். இந்த நண்பர்களை கொண்டு வந்து தன்னுடைய மனைவியோடு நெருங்கி பழகவிடுகிறார் சப்பாணி. அப்படி பழகுவதற்கு, அந்த நண்பர்கள் சப்பாணிக்கு பணம் தருகிறார்கள். இதைத்தான் வாழ்க்கை முறையாக சப்பாணி தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். இது தான் அந்தக் குடும்பத்தின் வருமானமாகவும் இருக்கிறது. அப்படி பழகிய சப்பாணியின் நண்பரான கபடி வீரர் ஒருவருக்கும், மோகனப்பிரியாவுக்கும் காதல் உருவாகுகிறது. அந்தக் கபடி வீரரோடு சேர்ந்து, மோகனப்பிரியா ஓடிப்போகிறார். இதனால், சப்பாணிக்கும் வருமானம் குறைகிறது. மேலும், மோகனப்பிரியாவையும், அந்தக் கபடி வீரரையும் கொலை செய்ய வேண்டும் என்ற ஆத்திரமும் சப்பாணிக்கு முதல் முதலாக கொலை வெறி வருகிறது. அவர்களைத் தேடி வந்ததில், அவர்கள் கடைசி வரைக்கும் கிடைக்கவேயில்லை. இந்தக் கொலை எண்ணம் வந்தபோது தான் பெரியசாமி எனும் பெரியவரை கொலை செய்து பணத்தை எடுத்துக்கொள்கிறார்.