மும்பையில் புகழ்பெற்ற நீரஜ் மரியா வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
மும்பையில் ஒரு புகழ் பெற்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஷாருக்கான் நடத்திய நிகழ்ச்சியைத் தொகுத்தவர் நீரஜ். இவருடைய கொலை சம்பவம் பற்றிய வழக்கு இது. நடிகராக வேண்டும் என்ற கனவுடன் மாஸ் கம்யூனிகேஷன் படித்துவிட்டு மும்பை மாநகரத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இவரைக் காணவில்லை என்று 7.5.2008 அன்று புகார் வருகிறது. இரண்டு நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. அவனுடைய நண்பர்களும், மரியா என்ற ஒரு நடிகையும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.
நண்பர்களிடம் போலீஸ் விசாரிக்கும் போது நடிகை மரியா மல்லாடு என்கிற ஏரியாவில் புதிதாக ஒரு அப்பார்ட்மெண்ட் வாடகை எடுத்திருப்பதாகவும் அதற்கு பொருள்கள் நகர்த்தி வைக்க தான் உதவி செய்யப் போவதாக குறிப்பிட்டதாக நீரஜ் சொன்னார். அதன் பிறகு தன் நண்பரை பார்க்கவில்லை. ஆறாம் தேதி தான் கடைசியாக அவனைப் பார்த்ததாக சொல்கிறார்கள். அடுத்ததாக மரியாவிடம் விசாரித்த போது நீரஜ் 10 மணி அளவில் இரவு தொடர்பு கொண்டு தான் வருவதாக குறிப்பிட்டதாகவும் ஆனால் மரியா மறுத்தும் 11 மணி அளவில் அவர் வந்து தன்னுடன் தங்கி மறுநாள் தனக்கு மல்லாடில் தான் வேலை இருக்கிறது அதனால் இரவு அவளுடன் தங்கி விடுவதாக சொல்லி இருக்கிறார். ஆனால் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் தனக்கு அந்தேரியில் ஒரு பார்ட்டி இருக்கிறது அங்கே செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அவசரத்தில் போனை கூட இங்கே வைத்துவிட்டு புறப்பட்டதாகவும் அந்தப் போனை நிஷாந்த் லால் என்பவரிடம் கொடுத்ததாக சொல்கிறார். மேலும் தனக்கு எமில் என்ற ஒரு கடற்கரை லெப்டினன்டுடன் தனக்கு நிச்சயமாக இருப்பதாகவும் சொல்கிறார். அவர் நண்பரின் காரை கடன் வாங்கி ஒரு ஷாப்பிங்காக ஏழாம் தேதி போய் விட்டேன் என்று சொல்கிறார்.
இந்த மரியா என்ற நடிகை பணக்கார குடும்பத்தில் ஒரு ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருடைய மகள். இதுவரை மரியா கன்னடத்தில் மூன்று திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். திருமணம் செய்து கொள்ள இருக்கும் எமில் என்பவர் அவளுடைய பள்ளி பருவத்தில் இருந்து பழக்கம் இருக்கிறது. மரியா வீட்டில் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டாலும், எமில் வீட்டில் பெரும் எதிர்ப்பு இருக்கிறது. பெற்றோர்கள் தனக்கு பணக்காரர் மற்றும் நடிகையின் சம்பந்தம் சரி வராது என்று எமிலை மனமாற்றம் செய்து கொள்ளுமாறு அறிவுரை கூறி கடற்படையில் சேர்த்து விடுகின்றனர். அவர் அந்தச் சமயம் கொச்சின் கடற்படையில் பணி புரிந்து வருகிறார். இதற்கிடையில் மரியா தனது நடிப்புத் திறமை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒரு நடனப்பள்ளியில் சேர்ந்து அங்கு இருப்பவருடன் நெருக்கமாகி அவருடைய அறிமுகத்தால் தான் மும்பையில் மாற்றலாகி நீரஜ் என்பவருக்கு அறிமுகம் ஆகிறார். நீரஜ்ஜுக்கு மரியாவைப் பிடித்து போக நிறைய ஆடிஷன் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறார். ஒரு தொடர் வாய்ப்புக்காக நீரஜுடனும் நெருக்கம் அதிகமாகி தொடர்ந்திருக்கிறாள். ஆனாலும், மரியா, எமிலியிடம் போன் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இப்படிதான் நிலைமை போய்க்கொண்டிருந்தது.
இந்த நிலையில், போலீஸ் விசாரணையில் ஒன்றும் முன்னேற்றம் இல்லாததால் மல்லாடு போலீஸ் நிலையத்திலிருந்து குற்ற விசாரணை பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்படுகிறது. அதன் பிறகு தான் வழக்கு தீவிரமடைந்து மொத்தம் 48 பேரை விசாரிக்கின்றனர். குறிப்பாக அந்த நடிகை தங்கியிருந்த அப்பார்ட்மெண்டின் வாட்ச்மேனிடம் விசாரித்த போது மரியாவை தேடிக்கொண்டு ஏழாம் தேதி காலையில் ஒரு இளைஞர் வந்ததாகவும், அதன் பிறகு அந்த இருவரும் சேர்ந்து ஒரு சான்ட்ரோ காரில் ஒரு கனமான பெட்டியுடன் காலை வெளியே சென்றதாக தனது ரிஜிஸ்டரில் பதிவு செய்திருப்பதைக் காட்டுகிறார். இந்தத் தகவலை வைத்து அந்தக் கார் எங்கே என்று நடிகையிடம் கேட்டபோது அந்தக் கார் எமிலியுடைய நண்பரது கார் என்றும் அவரிடம் இருந்து இரவல் வாங்கியதாக சொல்கிறாள். ஆனால் அந்த நண்பரிடம் கேட்ட போது இல்லை என்று மறுத்து விடுகிறார். இவ்வழக்கு குறித்த மேலும் விவரங்களை அடுத்த தொடரில் காணலாம்..