கேரளா கன்னியாஸ்திரி கொலை வழக்கில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்
அடைக்கல்ராஜ் என்கிற திருடன் தான் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தது. இறந்து போன அந்தப் பெண் தலையில் தாக்கப்பட்டிருந்தார். இரண்டு ஃபாதர்களும் ஒரு நர்சும் சேர்ந்து அந்தப் பெண்ணை பலமாகத் தாக்கி கிணற்றில் தூக்கி வீசியிருக்கிறார்கள். இவை அனைத்தையும் நேரில் பார்த்த அடைக்கல்ராஜ், உண்மைகள் அனைத்தையும் சொன்னான். இறந்து போன பெண்ணையும், தன்னுடைய மகளாக நினைப்பதால் இந்த உண்மைகளைச் சொல்வதாகக் கூறினான். ஆனால் அவன் தான் கொலை செய்தவன் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல்கள் வழக்கை திசை திருப்ப முயன்றனர்.
ஆனாலும் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளியே வரத் தொடங்கின. கொலை செய்த சிஸ்டருக்கும், ஃபாதர் ஒருவருக்கும் தவறான தொடர்பு இருந்துள்ளது. இன்னொரு ஃபாதரையும் சேர்த்துக்கொண்டு மூவரும் உல்லாசமாக இருக்க முடிவு செய்தபோது அந்த இடத்தில் இந்த கன்னியாஸ்திரி இருந்துள்ளார். இவரை உயிரோடு விட்டால் உண்மை வெளியே தெரிந்துவிடும் என்பதற்காக அந்தப் பெண்ணை மூவரும் சேர்ந்து தாக்கினர். அதன்பிறகு கொலை செய்தனர். குற்றவாளிகளில் ஒருவர் இறந்த நிலையில், இருவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதிலும் அவர்கள் பெயில் வாங்கி வெளியே வந்தனர். உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அதிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சில தில்லுமுல்லுகளைச் செய்தனர்.
இறுதியில் உண்மைகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. குற்றம் நடந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பு இது.