பணமோசடி, கருப்பு பணம் வைத்திருத்தல் ஆகியவற்றுக்கான தண்டனைகள் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் விரிவாக விளக்குகிறார்
கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது தான் பணமோசடி. இதைத் தடுப்பதற்கு தான் தனியாக சட்டம் இருக்கிறது. வரி செலுத்தாத பணம் அத்தனையும் கருப்பு பணம் தான். லஞ்சம் என்பது மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கிறது. திருக்குறளில் கூட இதுபற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. கருப்பு பணமாக வந்த பணத்துக்கு நாம் வரி கட்டாமல் கருப்பு பணமாகவே வைத்திருக்கும்போது அதனால் அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்பதே சட்டத்தின் நோக்கம்.
தவணை சொல்லாமல் இலவசமாக அரசாங்கத்துக்கு வருமானம் கொடுத்து வருபவர்கள் டாஸ்மாக்கில் மது அருந்தும் மதுப்பிரியர்கள் மட்டும்தான். இங்கு பலருக்கு பணமோசடி வழக்கு குறித்தும், வருமான வரி சட்டங்கள் குறித்தும் சரியான புரிதல் இல்லை. வரி கட்டாமலேயே இருந்தாலோ, அல்லது குறைந்த அளவில் வரி செலுத்தினாலோ நீங்கள் பணமோசடி வழக்கில் சிக்குவீர்கள். அப்படி வைத்திருக்கும் பணம் தான் கருப்புப்பணம். இப்போது சட்டத்தின் பார்வையில் நீங்கள் குற்றவாளி தான். விசாரணை தொடங்கும் முன்பே இதுபோன்ற வழக்குகளில் தேவையான ஆதாரங்கள் கிடைத்துவிடும்.
குற்றத்தை ஒப்புக்கொண்டால் அது ஒரு வகையாக டீல் செய்யப்படும். இல்லையென்றால் வழக்கு தொடுக்கப்படும். சொத்து, வங்கிக்கணக்கு, கிரெடிட் கார்டு என அனைத்தும் முடக்கப்படும். இதனால் அவர்களுடைய குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் உண்மை. சாதாரண ரவுடிக்கும், மிகப்பெரிய இடத்தில் இருக்கும் மனிதருக்கும் சட்டம் ஒன்றுதான். போக்சோ சட்டத்தில் பல ஆசிரியர்கள் சிக்குவதை நாம் பார்க்கிறோம். குற்றத்தை செய்த பிறகு அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
தவறு செய்யாமல் இருந்தால் தப்பிக்கலாம். இல்லையென்றால் சட்டம் நிச்சயம் தண்டிக்கும். குற்றம் சாட்டப்பட்டவரிடம் கடைசியாகத்தான் விசாரணை நடைபெறும். விசாரணைக்கு அவர் ஒத்துழைத்துதான் ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. ஜெயலலிதாவின் வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அவர் மறைந்துவிட்டதால் அவர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சசிகலா சிறை சென்றார். செலுத்த வேண்டிய அபராதமும் செலுத்தப்பட்டது.