Skip to main content

காணாமல் போன இரண்டாவது மனைவி; தெருவுக்கு வந்த குழந்தைகள் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு:58

Published on 22/08/2024 | Edited on 22/08/2024
detective malathis investigation 58

முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், காணாமல் போன தன்னுடைய இரண்டாவது மனைவியை கண்டுபிடித்து தருமாறு கணவன் கொடுத்த ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.

ஏற்கெனவே, காணாமல் போன அவருடைய முதல் மனைவியை கண்டுபிடித்து கொடுத்து அதன் பிறகு அவர்களுக்குள் டைவர்ஸ் ஆனது. அதன் பிறகு, அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இவர்களுக்குள் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், மீண்டும் இரண்டாவது மனைவியை காணவில்லை என என்னிடம் வந்தார். என்ன பிரச்சனை நடந்தது எனக் கேட்டதில், அடிக்கடி மனைவியை திட்டியதால் கோபமடைந்து அவள் வீட்டை விட்டை வெளியேறிவிட்டாள் எனக் கூறினார். வீட்டில் இருந்து கொஞ்சம் பணம், அவளுடைய துணிகள் மற்றும் அவளுடைய செர்டிபிகேட்ஸ் அனைத்தையும் காணவில்லை. 

வழக்கம் போல், நாங்கள் அந்த கேஸை எடுத்து அந்த பெண்ணுடைய போனை செக் செய்தோம். அந்த போன் செயல்பாட்டில் தான் இருந்தது. அந்த பெண்ணுக்கு வேறு மாதிரியாக போனில் பேசியதில் அந்த பெண் இங்கு இல்லை எனத் தெரியவந்தது. அதன் பிறகு, போலீஸ் உதவியுடன் அந்த பெண் இருக்கும் இடத்தை தெரிந்துகொண்டு அந்த பெண்ணை தேட ஆரம்பிக்கிறோம். அப்படி செய்ததில், ஒரு நாள் அந்த பெண் ஒரு ஆபிஸிற்குள் நுழைவதை பார்க்கிறோம். மாலை வரை அங்கே காத்திருந்து, அந்த பெண்ணை பின்தொடர்ந்து அவர் தங்கியிருக்கும் ஹாஸ்டலை கண்டுபிடிக்கிறோம். இதை பற்றி கணவருக்கு தகவல் கொடுத்தோம். அவரும் தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு, அந்த இடத்திற்கு பக்கத்தில் ஒரு ரூம் எடுத்து தங்கினார். 

அதன் பிறகு, அந்த பெண் இருக்கும் ஹாஸ்டலுக்குச் சென்று அவரை சந்தித்து அவருடன் பேச ஆரம்பிக்கிறோம். நடந்தவற்றையெல்லாம் சொல்லி, அவளுடைய பிரச்சனைகள் என்ன என்று கேட்டதில், அந்த பெண் அழுதுகொண்டே தன்னுடைய கணவன் கெட்ட வார்த்தையால் அடிக்கடி திட்டுவதும், வீட்டில் இருந்து எதுவும் செய்யவில்லை என்று குறை கூறுவதுமாக இருக்கிறார். அதனால் தான் வேலை பார்த்து கொண்டு ஸ்டேபிள் ஆனபிறகு குழந்தைகளை அழைத்துக் கொள்ளலாம் என நினைத்து தனியாக வீட்டை விட்டு வெளியே வந்தேன் என்றார்.  அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அவருடன் பேச ஆரம்பித்தோம். அவரும் தன் மனைவியை திட்டியதை ஒப்புக்கொண்டார். அவருடைய தவறை அவருக்கு உணர்த்தியதில், அவரும் அந்த தவறை திருத்திக்கொள்வதாக சொன்னார். அதன் பின்னர், அந்த பெண்ணையும் குழந்தைகளையும் அவருடன் ஒப்படைத்து அனுப்பி வைத்தோம்.