Skip to main content

"மருமகளுக்கு குறி வைத்த மாமனார்; அட்ஜஸ்ட் பண்ணிக்க சொன்ன கணவன்" - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு:18

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

  Advocate Santhakumari's Valakku En - 18

 

தன்னிடம் வந்த வித்தியாசமான வழக்குகள் குறித்து  குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடம் தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறார். 

 

ரம்யா என்கிற பெண்ணுக்கு அவசரம் அவசரமாக திருமணம் நடந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்ட மாமியாரைப் பார்த்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட திருமணம். வாழ்க்கை அமைதியாக நகர்ந்தது. தன்னை யாரோ ஒருவர் பின்தொடர்வது போன்ற உணர்வு ரம்யாவுக்கு அடிக்கடி ஏற்பட்டது. தான் குளிக்கும் போது தன்னை யாரோ மறைந்திருந்து பார்ப்பது போல அவளுக்குத் தோன்றியது. கோவிலுக்குச் சென்று வரும் போது அவளுக்கு பூ வாங்கித் தருவதை அவளுடைய மாமனார் தொடர்ந்து செய்து வந்தார். அவளைத் தன் மகள் போலப் பார்ப்பதாகக் கூறினார். 

 

மாமனாரின் நடவடிக்கைகள் அவளுக்கு பிடிக்கவில்லை; எரிச்சலை ஏற்படுத்தியது. தனிக்குடித்தனம் செல்லலாம் என்று கணவரிடம் கூறினாள். தாய் தந்தையை விட்டு வர முடியாது என்று கணவன் மறுத்தான். ஒருநாள் அவள் சமைத்துக் கொண்டிருந்தபோது அவள் அருகில் வந்த மாமனார், அவள் அசந்த நேரத்தில் அவளை இழுத்து வைத்து முத்தம் கொடுத்திருக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் பதறிப்போன அவள், மாலை வீட்டுக்கு வந்த கணவனிடம் நடந்தவற்றைக் கூறினாள். அப்பாவிடம் விசாரித்த போது அவளுக்கு இன்னொருவருடன் தொடர்பு இருப்பதாகவும், அதை மறைப்பதற்காக தன் மீது பழி போடுவதாகவும் தன் மகனிடம் கூறி இருக்கிறார். 

 

தனது அப்பா தன் மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார் என்ற உண்மை தெரிய வந்த பிறகும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறு அவளிடம் கூறினான் கணவன். அவள் உண்மையிலேயே ஆடிப்போனாள். அனைத்தையும் அந்த பெண் தன் தந்தையிடம் கூறினாள். தந்தை வந்து வாக்குவாதம் செய்தார். அதன் பிறகு இங்கு வாழ முடியாது என்று கூறி தன் தாய் வீட்டிற்கு அவள் சென்றாள். சில நாட்கள் கழித்து கணவன் சமாதானம் பேச வந்தான். என்னை விட சொத்து தான் பெரிது என்று நினைத்த உன்னோடு இனி வாழ முடியாது என்று அவள் கூறினாள். பாதுகாப்பில்லாத அந்த வீட்டில் இனி அவளால் வாழ முடியாது என்று கணவன் மீது விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தோம். 

 

கணவன் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் அவள் இணங்கவில்லை. நிரந்தர ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தோம். அதன் பிறகு அவளுக்கு விவாகரத்தும் கிடைத்தது. அவனிடமிருந்து ஒரு ஜீவனாம்ச தொகையும் கிடைத்தது.