இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமிப்பது குறித்து யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் விராட் கோலியின் கேப்டன்ஸி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. மேலும் 3 விதமான பார்மெட்டுகளுக்கும் கோலி கேப்டனாக இருப்பதால், அவருக்கு நெருக்கடி அதிகமாக இருப்பதாகவும், அதனால் 3 விதமான பார்மெட்டுகளுக்கும் வெவ்வேறு கேப்டன்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய அணி வீரர் யுவராஜ் சிங், "முன்பெல்லாம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் மட்டுமே இருக்கும். ஆனால் இப்போது டி20 உட்பட மூன்று விதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒரே நேரத்தில் இந்த மூன்று விதமான போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பது சிரமமான ஒன்று தான்.
எனவே டி20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தால் விராட் கோலிக்கு சற்று ஓய்வு கிடைக்கும் என நினைக்கிறன். மேலும் விராட் கோலியின் சிரமத்தை எப்படி குறைக்க வேண்டுமென அணி நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும்“ என்று யுவராஜ் கூறினார்.